கற்பிட்டி – கீரிமுந்தல் களப்பு பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் கீரிமுந்தல் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான 8 மூடைகள் காணப்பட்டுள்ளதுடன், அந்த மூடைகளை சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த எட்டு மூடைகளில் இருந்து ஈரமான எடையுடன் 465 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 465 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

