Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெலிகந்தை பகுதியில் உணவகமொன்றில் தீப்பரவல்

வெலிகந்தை பகுதியில் உணவகமொன்றில் தீப்பரவல்

வெலிகந்தையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (06) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலன்னறுவை நகர சபையின் தீயணைப்பு பிரிவு, இராணுவ அதிகாரிகள் மற்றும் வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles