பேலியகொட பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது துப்பாக்கியால் தலைக்கு சுட்டதில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தற்கொலையா அல்லது குற்ற செயலா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.