கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த முகவர் நிலையத்தை நடத்தி வந்த நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
11 கடவுச்சீட்டுகள், மருத்துவ அறிக்கைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், வங்கி பற்றுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களும் இதன்போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேக நபரை இன்று (30) கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.