கீரி சம்பாவிற்கு இணையான 100,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (27) நடைபெற்ற பழம் மற்றும் காய்கறி கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த அரிசி கையிருப்பின் மூலம் அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி அரிசி தட்டுப்பாடு நீங்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.