புத்தளம் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.