தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் சிறுவர்களிடையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர் கலாநிதி தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.