இன்று (20) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கோப் குழுவின் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள கோப் குழுவை தொடர்வதா அல்லது கலைக்கப்பட்டு அதற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.