Tuesday, September 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவ , கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு ஒருவருக்கு குறித்த சங்கை விற்பனை செய்ய தயாராகி வருவதாக விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles