செய்திகள்உள்நாட்டுபலாங்கொடை மண்சரிவில் சிக்கிய நால்வரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொடை மண்சரிவில் சிக்கிய நால்வரும் சடலங்களாக மீட்பு

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் சிக்கி காணாமல் போன நால்வரும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்சமயம் மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட அனைத்து சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே காணாமல் போயிருந்தனர்.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles