கொஸ்வத்து ஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) மாலை இந்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹஷன் சுதேஷ் என்ற 22 வயதுடைய இளைஞனே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
வெஹென – பலுவெல்கல பிரதேசத்தின் ஊடாக பாயும் கொஸ்வத்து ஓயாவில் நேற்று (12) பிற்பகல் மூன்று இளைஞர்கள் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.
நீரில் நீந்திக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போன இளைஞனை தேடும் நடவடிக்கைகளை கொஸ்வத்தை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.