சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றான அஸ்வெசும திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மும்மடங்காக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அநீதி இடம்பெற்ற குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் எனவும், திட்டத்தை முன்னெடுத்து செல்ல சமுர்த்தி பணியாளர்களின் உதவியும் பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அங்கவீனமுற்றவர்களுக்கு 7500 ரூபாவும், முதியோர்களுக்கு 3000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படும்.