செய்திகள்உள்நாட்டுதொண்டையில் இரு மாத்திரைகள் சிக்கி சிறுமி மரணம்

தொண்டையில் இரு மாத்திரைகள் சிக்கி சிறுமி மரணம்

பலப்பிட்டிய- மருதானை பிரதேசத்தில் தொண்டையில் இரண்டு மாத்திரைகள் சிக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலப்பிட்டிய ரேவத வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles