தபால் ஊழியர்கள் இன்று (07) நள்ளிரவு முதல் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலா ஹோட்டலுக்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
முழு தபால் திணைக்களத்திலும் இணைக்கப்பட்ட சுமார் 27,000 ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.