Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்ய முடியாது

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்ய முடியாது

கட்டுப்பாட்டு விலைக்கு மாத்திரமே சீனியை விற்பனை செய்ய வேண்டும் எனவும், அதிக விலைக்கு சீனி விற்பனை செய்பவர்களை நுகர்வோர் சேவை அதிகார சபை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பிற்பகல் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச வருமானத் தேவைக்கேற்ப சீனிக்கு விசேட சரக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் உள்ள சீனி கையிருப்புகளின் விலை உயர்வதைத் தடுப்பதற்காக சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இம்முறை முன்பைப் போல் அல்லாமல், பொதி செய்யப்பட்ட சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையே அமுல்படுத்தப்படும் என்றும், யாரும் தேவையற்ற இலாபம் ஈட்ட இடமளிக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles