19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று இரவு நாட்டை வந்தடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியுடன், இந்தக் குழுவினர் நேற்று இரவு 9.35 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 184 இல் நாட்டை வந்தடைந்தனர்.
பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியுடன் நடைபெற்ற 05 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 03-02 போட்டிகள் என இலங்கை அணி வீரர்கள் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், இலங்கை அணியை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.