பொத்துப்பிட்டிய -ரம்புக்க பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
65 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான கணவர் 60 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளதோடு, குற்றத்தை செய்த சந்தேகநபரான கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும், பின்னர் திருமணமான பெண்ணுடன் வாழ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இன்று (02) இருவருக்குமிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.