எதிர்வரும் வாரத்தில் பங்களாதேஷிடமிருந்து 58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருடன் நடத்திய சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாகவும், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.