தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை ஒன்றின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 2,000 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கு முன்னர் 1000 ரூபாவாக இருந்த கட்டணம் 15,000 ரூபாவாக இருக்க வேண்டுமென பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகிறது.
பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கான வருடாந்தம் அறவிடப்பட்ட 2,000 ரூபா கட்டணம், தற்போது 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கட்டணமாக ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்கும் போது 25 ரூபாவும், பௌதீக ஆவணங்கள் அல்லது இலத்திரனியல் மூலம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 500 ரூபாவும் அறவிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.