புதிய உயர்ஸ்தானிகர்கள் இருவர் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வுபெற்ற) ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்னவை நியமிப்பதற்கு, கியூபா குடியரசின் இலங்கை உயர்ஸ்தானிகராக அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதன்னவை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராக எயர் சீப் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சுதர்ஷன கரகொட பதிரனவை நியமிப்பதற்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (19) நாடாளுமன்றத்தில் கூடியது. இதில் அமைச்சர் விதுர விக்ரமநாயக, நாடாளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, உதய கம்மன்பில மற்றும் (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.