நாட்டின் சுகாதாரத் துறையினால் விவசாயிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளின் போது தமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் பாதிக்கப்படுவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எலிக்காய்ச்சல், கால் அல்லது கைகளில் சிறிய கொப்புளங்கள் மூலமாகவோ அல்லது நீர்வழிகளில் எலிகளின் மலத்துடன் வரும் நீர் மூலமாகவோ தொற்றக்கூடும்
எனவே வருடாந்தம் சுமார் 7,000 nபேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் அவர்களில் 125 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
20 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், களப்பணியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொள்கிறது.