4 ஆண்டுகளுக்குப் பின்னர் குமண தேசிய பூங்கா அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக பூங்கா காப்பாளர் டி.வி. சமரநாயக்க தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுமார் 4 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த காலப்பகுதியில் 11,999 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
குமண தேசிய பூங்காவில் 63 புலிகள் இருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் இந்த விலங்குகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.