2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் க்ளென் மெக்ஸ்வெல் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில், அதிகபடியாக மார்னஸ் லபுஸ்காக்னே 46 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் காகிசோ ரபாடா 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.