இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, ரைகம வராவத்தையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம அங்குருவத்தோட்ட வீதியில் ரைகம சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.