கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சம்பம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மற்றுமோர் நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இந்த உத்தரவினை நேற்று (10) பிறப்பித்தார்.
1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே மேற்கண்ட தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்தின் முதலாவது சந்தேகநபருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.