ஜெக்சன் எந்தனியின் மரணம் தொடர்பில் வைத்தியர்கள் விளக்கமளிக்க வேண்டும் என மூத்த திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெக்சன் எந்தனிக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜெக்சன் எந்தனிக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து அங்குள்ளவர்களுடன் உரையாடியதாக சோமரத்ன திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவரது மரணித்தமை தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
