2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு அரசாங்க வருமானம் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசாங்க வருமானம் கடந்த வருடம் உலகிலேயே மிகக்குறைந்த நாடுகளில் ஒன்றாக இருந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அரசாங்கத்தின் வருமானம் 8.3 சதவீதமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகரிப்பு இன்னும் போதுமானதாக இல்லை என்று அமைச்சர் கூறினார்.
வருமான இலக்குகளை அடைவதற்குப் பெரும் தடையாக உள்ள நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்த்து, வரி ஏய்ப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால், புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.