Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஒருவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஒருவர் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி, பல நபர்களிடமிருந்து நிதி மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடுகன்னாவை, பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையில் நுவரெலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மீரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இவருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அனுராதபுரம், நுகேகொட, களுத்துறை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் 13 நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles