நாடளாவிய ரீதியில் இதுவரை 64,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 29 நாட்களில் 2,401 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாளாந்தம் 80-100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் கூறினார்.
மழை பெய்யும் மாவட்டங்களில் மீண்டும் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக குறித்த பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.