Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்கொரோனாவை விட ஆபத்தான தொற்று குறித்து எச்சரிக்கை

கொரோனாவை விட ஆபத்தான தொற்று குறித்து எச்சரிக்கை

கொரோனாவுக்கு பின்னர் அடுத்து வரும் பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டனின் கொரோனா வெக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அடுத்து ஏற்படும் பாதிப்பால் 5 கோடி பேர்வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் 70 இலட்சம் பேர் உயிரிழந்தனர் எனவும் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் தொற்றான Disease X அதைவிட மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய நோய் தொற்று கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்றும் இந்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்துள்ளனர்.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் பாதிப்புகளை வைத்துக் கொண்டு Disease X பாதிப்பிற்கான வெக்சின்களை உருவாக்கும் முயற்சியிலும் இங்கிலாந்து ஆய்வாளர்கள் தொடங்கி உள்ளனர்.

காலநிலை மாற்றம் வைரஸ் உருமாறக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Keep exploring...

Related Articles