Thursday, April 2, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இறுதி தவணையாக இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிடமிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் கடனாf பெற்றிருந்தது.

இலங்கை, கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த நிலையில், தமது அனைத்து வெளிநாட்டு கடன் செலுத்துகைகளையும் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில், குறித்த கடன் தொகையில் கடந்த ஒகஸ்ட் 17 ஆம் திகதி 50 மில்லியன் அமெரிக்க டொலரையும், கடந்த 2 ஆம் திகதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தியது.

அத்துடன், குறித்த கடனின் இறுதி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 21 ஆம் திகதி இலங்கை செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles