13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பிக்கு ஒருவரை எஹெட்டுவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பிக்கு வசிக்கும் விகாரையில் சிறுவனொருவன் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹதுவே பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, எஹெட்வெவபொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.