தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில், தலைமன்னாரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு 10.34 மணிக்கு கோட்டை நிலையத்தை அடைந்து, பிற்பகல் 3.35 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 10.48 மணிக்கு தலைமன்னார் துறைமுகத்தை சென்றடையும்.