Friday, July 25, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் காயம்

பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் காயம்

நாரம்மலவில் இருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றின் பின்னல் மற்றுமொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது பாதுக்க துன்னான பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் 21 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் படுகாயமடைந்த 18 மாணவர்கள் பாதுக்க பிரதேச வைத்தியசாலையிலும் 3 மாணவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பாதுக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles