Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளையில் வெற்றிலை மென்று துப்ப தடை

பதுளையில் வெற்றிலை மென்று துப்ப தடை

ஊவா மாகாணத்தின் பதுளை நகரம் வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்பு சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் மற்றும் பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது.

பதுளை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles