Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெனல் 4 ஆவண தகவல்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு

செனல் 4 ஆவண தகவல்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு

செனல் 4 வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.

கோரிக்கைகளை விசாரிக்க சர்வதேச ஆதரவையும் கோரலாம் என அவர் கூறினார்.

அனைத்து உரிமைகோரல்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர்இ செனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட நேரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் போது அல்லது சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படங்கள் மற்றும் காட்சிகளை வெளியிடுவது பல்வேறு நிறுவனங்களின் நடைமுறையாக இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles