போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட மதுவரித்திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் மீது மாலபே பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவர்களில் காயமடைந்த ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.