நெல் கொள்வனவுக்காக 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
தற்போது 11 மாவட்டங்களில் இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக 39 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.
இதுவரை 27 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
