வறட்சியான காலநிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களின் அளவு 50,000 ஏக்கராக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடவலவ பிரதேசத்தில் மாத்திரம் பயிர் சேதங்களை கணக்கிடுவதற்கு 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.