Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயது சிறுவன் மரணம்

குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயது சிறுவன் மரணம்

நுவரெலியா – பம்பரக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது

பம்பரக்கலை பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற போது அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நுவரெலியா பம்பரக்கலையை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles