Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலத்தை கையகப்படுத்த காடுகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

நிலத்தை கையகப்படுத்த காடுகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு

நிலத்தை கையகப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் காடுகளை தீக்கிரையாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 160 க்கும் அதிகமான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நிலவும் வறட்சியான காலநிலையினால், கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாதுகாப்பு வனாந்தரங்களில், தீப்பரவல்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, திருகோணமலை ஆண்டான்குளம் குளம், விக்டோரியா நீர்த்தேக்கம், இலுக்பெலஸ்ஸ, போன்றவற்றுக்கு அருகில் தீ வைப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், எல்ல பகுதியில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் தொடர்பில் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் சாலியவௌ தப்போவ பாதுகாப்பு பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles