ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட சுமார் 1500 விவசாயிகளுக்கான யூரியா பசளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக சுமார் 180 பயனாளிகளுக்கு கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தானால் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
1.25 ஏக்கர் நிலப்பரப்புக்கு குறைவாக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு 25 கிலோ கிராம் யூரியா பசளையும் அதற்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவருக்கு 50 கிலோ கிராம் யூரியாவும் வழங்கப்பட்டது.