Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதியோர் - மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையில் மாற்றமில்லை

முதியோர் – மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையில் மாற்றமில்லை

புதிய கொடுப்பனவு முறையொன்று தயாரிக்கப்படும் வரை 647,683 பேருக்கு “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெரியவர்களுக்கான கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் கொடுப்பனவு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் இதனை பதிவிட்டுள்ளார்.

இதன்படி, காத்திருப்போர் பட்டியல் உட்பட 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோய் உதவித்தொகையும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முதியோர் கொடுப்பனவை தபால் நிலையங்களிலிருந்தும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகளை பிராந்திய செயலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles