சமனலவெவ நீர்த்தேக்கத்தில் தற்போதுள்ள நீர் இன்னும் 4 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாகும் என அந்த நீர்த்தேகத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 3.9 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த பகுதியில் உள்ள சில விவசாயிகளுக்கு இன்னும் நீர் கிடைக்கப்பெறவில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.