2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 69 மருந்துகள் பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 40 மருந்துகள் அரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டவை என்றும் மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில்வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் வழங்கும் மருந்துகளின் நிலை தொடர்பான பிரச்சினைகளை தவிர்ப்பதை விட அவற்றை சரிசெய்வதில் உரிய கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தலைவர் தெரிவித்தார்.