வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்துள்ளார்.
அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
குறித்த பிரதேசங்கள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் கொள்கலன் தாங்கி வாகனங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.