இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலையும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழு பேர் கொண்ட குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.