கடும் வறட்சியின் போது யால, வில்பத்து மற்றும் ஏனைய சரணாலயங்களில் வாழும் சுமார் 3000 வனவிலங்குகள் உயிரிழப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
4 வருடங்களுக்கு ஒருமுறை நாட்டில் ஏற்படும் இந்த வரட்சியினால் அதிகளவான விலங்குகளை நாம் இழக்கின்றோம்.
நீர்வள வாரியத்தின் தலைவராக தான் பதவி வகித்த காலத்தில், வறட்சி காலங்களில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக சரணாலயங்களில் குளங்களை உருவாக்க திட்டமிட்டதாக அவர் கூறினார்.
வனவிலங்குகள் நடமாடும் சரணாலயங்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக ‘குட்டம் குளம்’ அமைத்தால் தண்ணீரின்றி வீணாக இறக்கும் வன விலங்குகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.