Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

மனைவியை கொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ‘கல்கட்டஸ்’ துப்பாக்கியால் மனைவியை கொன்று ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களான எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட நீதவான் வருகை தந்து மரண விசாரணைகள் இடம்பெற்ற பின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles