சைக்கிளை திருடிய ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஒருவர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரம்மல ஹொரொம்பாவ பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் குளம் சுற்றுவட்டம் வெலங்கொல்ல பிரதேசத்தில் ஒருவரின் காணிக்குள் நுழைந்து அவர் சைக்கிளை திருடிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
